உளவாளிக்கு விஷம் வைத்த விவகாரம்: 23 நாட்டு தூதரகங்கள் வெளியேற ரஷ்யா உத்தரவு

  Padmapriya   | Last Modified : 31 Mar, 2018 04:20 pm

உளவாளிக்கு விஷம் வைக்கப்பட்ட விவகாரத்தில், ரஷ்யா தூதர்களை உலக நாடுகள் பல திருப்பி அனுப்பியதற்கு பதிலடி தரும் வகையில், 23 நாடுகளைச் சேர்ந்த தூதர்களை தங்கள் நாட்டிலிருந்து வெளியேறுமாறு ரஷ்யா உத்தரவிட்டுள்ளது.

ரஷ்யா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு உளவாளியாக செயல்பட்ட செர்கேய் ஸ்கிரிபால் இங்கிலாந்தின் சாலிஸ்பரி நகரில் வசித்து வந்தார். செர்கேய் மீதும், அவரது மகள் மீதும் நடத்தப்பட்ட ரசாயானத் தாக்குதலுக்கு, ரஷ்யாவே காரணம் என இங்கிலாந்து குற்றம்சாட்டியது.

இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் உள்ள ரஷ்ய தூதர்கள் திருப்பியனுப்பட்டனர். இதேபோல பல ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் ரஷ்ய தூதர்களை திருப்பி அனுப்பின. இதற்கு பதிலடி தரும் வகையில், 23 நாடுகளின் தூதர்களை ரஷ்யாவைவிட்டு வெளியேறுமாறு அந்நாடு உத்தரவிட்டுள்ளது. ஜெர்மனி, போலந்து, நெதர்லாந்து, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளின் தூதர்கள் சிலரை வெளியேறுமாறு ரஷ்யா உத்தரவிட்டுள்ளது.

இந்த நடவடிக்கை குறித்து கருத்துக் கூறியுள்ள நெதர்லாந்து, இது எதிர்பார்த்த ஒன்றுதான் என்றது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close