ரஷ்ய அதிபராக 4வது முறை பதவியேற்றார் புடின்!

  Newstm Desk   | Last Modified : 08 May, 2018 03:40 am


ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், 4வது முறையாக நேற்று அதிபர் பதவியேற்றார். மார்ச் மாதம் நடந்த தேர்தலில், புடின் 70% வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

விளாடிமிர் புடின், ரஷ்யாவின் அதிபராகவும், பிரதமராகவும், கடந்த 2000ம் ஆண்டு முதல் மாற்றி மாற்றி பதவி வகித்து வருகிறார். இரண்டு முறை மட்டுமே அதிபர் தேர்தலில் நிற்க முடியும் என்ற விதியை முறியடிப்பதற்காக, இரண்டு முறை அதிபராக தனது பதவிக்காலத்தை கழித்த புடின், அதன்பின் தனக்கு மிகவும் நெருக்கமான டிமிட்ரி மெட்வடேவை அதிபராக நிறுத்தி, தான் பிரதமராக 4 வருடங்கள் இருந்தார். அதன்பின், 2012ம் ஆண்டு மீண்டும் அதிபராக நின்று வெற்றி பெற்றார். 

இந்த சமயம் அதிபருக்கான பதவிக்காலத்தை 4ல் இருந்து 6 வருடங்களாகவும் அவர் உயர்த்தினார். இந்த ஆண்டோடு அவரது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. 

புடினுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்கட்சித் தலைவரான அலெக்சேய் நவால்னி, தேர்தலில் நிற்க தடை விதிக்கப்பட்டது. அதன்பின், 70% வாக்குகளை பெற்று புடின் அமோக வெற்றி பெற்றார். ஆனால், இந்த ரஷ்யா தேர்தலும் வழக்கம் போலவே, ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை என்று பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

புடினின் தொடர் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு நடுவே, நேற்று அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. இதோடு 4வது முறையாக அவர் அதிபராக பதவியேற்கிறார். 2024ம் ஆண்டு வரை அவரது பதவிக்காலம் நீடிக்கும் நிலையில், அதன்பின், அவர் தேர்தலில் நிற்க முடியாது. ஆனால், அரசியல் சாசனத்தில் மாற்றம் கொண்டு வந்து மீண்டும் பதவியில் நீடிக்க அவர் நிச்சயம் முயற்சிகள் எடுப்பார் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close