எல்லைத் தாண்டிய பசுவுக்கு மரண தண்டனை: ஐரோப்பாவில் வலுக்கிறது எதிர்ப்பு

  Padmapriya   | Last Modified : 05 Jun, 2018 12:26 pm

pregnant-cow-sentenced-to-death-for-wandering-in-eu-border

ஐரோப்பிய எல்லையைத் தாண்டிச் சென்று விதிகளை மீறியதால், சினையாக இருந்த பசு ஒன்றுக்கு பல்கேரிய நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தண்டனையை நிறுத்த அங்குக் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.  

பல்கேரிய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கோபிலோவ்ஸ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் இவான் ஹரலம்பியேவ். இவர் மாடுகளை வளர்த்து வருகிறார்.  இந்த நிலையில் அவரது மந்தையில் இருந்த பென்கா என்ற சினை பசு, பல்கேரிய எல்லைத் தாண்டி, செர்பியாவுக்குள் நுழைந்தது. ஐரோப்பிய கண்டத்தில் சட்டங்கள் மிகவும் கடுமையானதாக இருக்கும். அதன்படி, ஐரோப்பிய சட்டத்தின் கீழ், உரிய ஆவணம் இல்லாமல் எல்லைத் தாண்டினால் மரண தண்டனை விதிக்கப்படும்.  

மேலும் அங்கு விலங்குகளைக் கொண்டு செல்வதற்குக் கால்நடை சுகாதாரச் சான்றிதழ் இருக்க வேண்டும். ஆனால் இவையாவும் பின்பற்றப்படவில்லை எனக் கூறி, ஐரோப்பிய அதிகாரிகள் அந்தப் பசுவை கொல்ல முடிவு செய்துள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் சினையாக உள்ள பசுவான பென்கா இன்னும் 3 வாரங்களில் பிரசவிக்க இருக்கிறது. பிராணிகளுக்குச் சட்டத்தைத் திணிப்பது குறித்து எதிர்ப்பும்,  பென்காவிற்கு விலக்கு அளிக்கக்கோரி, இணையத்தில் ஆதரவு கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டு வருகிறது. 

இதனைக் கொண்டு, ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பென்காவிற்கு விதிவிலக்கு பெற திட்டமிடப்பட்டுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close