ஹிட்லர் செய்த கொடுமைக்கு மன்னிப்பு கேட்ட ஜெர்மனி அதிபர்

  Newstm Desk   | Last Modified : 05 Jun, 2018 04:40 pm
german-president-apologises-to-lgbt-community-for-injustice-by-hitler-regime

ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் கொடூரமாக சித்தரவதை செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டதற்கு, தற்போதைய அதிபர் ப்ராங் ஸ்டெய்ன்மெய்ர் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜெர்மனியில் சர்வாதிகாரி ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் யூதர்கள், கம்யூனிஸ்டுகள் மிகக் கொடூரமாக கொன்று அழிக்கப்பட்டனர். அவருடைய ஆட்சிக் காலத்தில், ஓரினச் சேர்க்கை கடும் குற்றமாக கருதப்பட்டது. ஓரினச்சேர்க்கையாளர்கள் கண்டறியப்பட்டு, கொடூரமாக சித்தரவதை செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டனர். குறிப்பாக இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்தில் பலர் தேடித்தேடி கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் நடந்த இந்த தவறுகளுக்கு தற்போதைய அதிபர் ப்ராங் ஸ்டெய்ன்மெய்ர் ஓரினச்சேர்க்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.  "அப்போது அவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தற்போது ஜெர்மனியில் ஓரினச்சேர்க்கையாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர்" என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையவை:

எவ்வளவு பெரிய வெடிகுண்டு... பெல்ஜியத்தில் கண்டெடுக்கப்பட்ட அதிர்ச்சி!

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close