மக்கள் ஆதரவால் மரண தண்டனை விலக்கு: தப்பிய சினைப் பசு

  Padmapriya   | Last Modified : 14 Jun, 2018 04:58 pm
bulgarian-cow-saved-from-slaughter

பல்கேரியாவை சேர்ந்த பென்கா என்ற சினைப் பசுவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்களின் முயற்சியால் ரத்தான இந்த தண்டனை அந்நாட்டு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாட்டின் எல்லையைத் தாண்டி விதிகளை மீறியதால், சினையாக இருந்த பசு ஒன்றுக்கு பல்கேரிய நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.  தொடர்ந்து நடத்தப்பட்ட கையெழுத்து இயக்க கோரிக்கைகளையும் எதிர்ப்புகளையும் பரிசீலித்து மக்களின் கோரிக்கையை ஏற்ற பல்கேரிய அரசு, பென்காவிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்திருக்கிறது.

பல்கேரிய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கோபிலோவ்ஸ்சி கிராமத்தைச் சேர்ந்த இவான் ஹரலம்பியேவ், மாடுகளை வளர்த்து வருகிறார். அவரது மந்தையில் இருந்த பென்கா என்ற சினை பசு, பல்கேரிய எல்லைத் தாண்டி, செர்பியாவுக்குள் நுழைந்தது. ஐரோப்பிய கண்டத்தில் சட்டங்கள் மிகவும் கடுமையானது. அதன்படி, ஐரோப்பிய சட்டத்தின் கீழ், உரிய ஆவணம் இல்லாமல் எல்லைத் தாண்டினால் மரண தண்டனை விதிக்கப்படும்.  

மேலும் அங்கு விலங்குகளைக் கொண்டு செல்வதற்குக் கால்நடை சுகாதாரச் சான்றிதழ் இருக்க வேண்டும். ஆனால் இவையாவும் பின்பற்றப்படவில்லை எனக் கூறி, ஐரோப்பிய அதிகாரிகள் அந்தப் பசுவை கொல்ல முடிவு செய்தனர்.

இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிராணிகளுக்குச் சட்டத்தைத் திணிப்பது குறித்து எதிர்ப்பும்,  பென்காவிற்கு விலக்கு அளிக்கக்கோரி, இணையத்தில் ஆதரவு கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டது. 

இதனைக் கொண்டு, ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பென்காவிற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. 

சினையாக இருந்த சுவான பென்கா இன்னும் சில தினங்களில் பிரசவிக்க இருக்கிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close