ஹாலிவுட் பாணியில் சிறையிலிருந்து ஹெலிகாப்டரில் தப்பிய கைதி!

  SRK   | Last Modified : 02 Jul, 2018 05:46 pm
french-prisoner-escapes-from-prison-in-helicopter

பிரான்ஸ் நாட்டில் மிகப்பெரிய குற்றவாளி ஒருவர், சிறையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு பிரென்ச் போலீஸால் முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவர் ரெடோய்ன் ஃபைத். 2010ம் ஆண்டு, ஒரு கொள்ளை சம்பவத்தின் போது, பெண் காவல்துறை அதிகாரியை கொலை செய்த வழக்கில் 25 வருடங்கள் சிறை தண்டனை பெற்றிருந்தார். இவர் ஏற்கனவே பிரான்ஸ் சிறையில் இருந்து 2013ம் ஆண்டு தப்பி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், நேற்று ஃபைத்தை அவரது சகோதரர் சந்திக்க வந்திருந்தார். இருவரும் பேசிக் கொண்டிருந்த போது, ஃபைத்தின் ஆட்கள் இரண்டு பேர் புகை குண்டுகளுடன் சிறைக்குள் புகுந்து அவரை அங்கிருந்து கூட்டிச் சென்றனர். அவர்கள்  மூவரும் பின்னர் ஒரு ஹெலிகாப்டர் மூலம் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஃபைத்தை பார்க்க வந்த அவரது சகோதரர் கைது செய்யப்பட்டார். தப்பிச் சென்ற ஃபைத்தை நாடு முழுவதும் தேடி வருகின்றனர். சுமார் 3000 போலீசார் இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. 

பயிற்சி ஹெலிகாப்டர் ஒன்றை, அதன் பைலட்டுடன் சேர்ந்து கடத்தியுள்ளனர், ஃபைத்தின் கூட்டாளிகள். பைலட்டை மிரட்டி, சிறையின் வளாகத்தில் ஹெலிகாப்டரை தரையிறக்க வைத்து, வெற்றிகரமாக ஃபைத்தை அங்கிருந்து தப்ப வைத்துள்ளனர். சிறை காவலர்கள் யாரும் இந்த சம்பவத்தில் காயப்படவில்லை. அந்த ஹெலிகாப்டர் பாரிஸ் நகருக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பைலட்டும் எந்த காயங்களும் இல்லாமல் விடுவிக்கப்பட்டார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close