படம் பேசுது: தெருவெங்கும் ஒயின் ஊற்றி கோலாகலம்!

  Newstm Desk   | Last Modified : 02 Jul, 2018 03:22 pm
what-s-on-in-spain-is-wine-festival-of-june

தலை முதல் கால் வரை தெரு தெருவாக ஓடி ஒருவர் மீது ஒருவர் ஒயின் ஊற்றி கொண்டாடும் வரலாற்று சிறப்புமிக்க திருவிழா ஸ்பெயின் நகரில் இந்த ஆண்டும் கொண்டாடப்பட்டது.  ஸ்பெயினின் நாட்டில் ஜூன் இறுதியில் கொண்டாடப்படும் ஒயின் திருவிழாவில் கலந்துகொண்ட மக்கள் ஒருவர் மீது ஒருவர் ஒயினை ஊற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். 

ஸ்பெயினில் கோடைகாலத்தில் விநோதமான கொண்டாட்டங்கள் நடப்பது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 29ஆம் தேதி, வடக்கு ஸ்பெயினின் ஹாரோ நகரத் தெருக்களில் கூடும் மக்கள் ஒருவர் மீது ஒருவர் ஒயினை ஊற்றிக் கொண்டாடுவது வழக்கம். இந்த ஒயின் திருவிழா பல நூறு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கைகளில் ஒயின் நிறைந்த பக்கெட்டுகள், குடுவைகளை ஏந்தி ஹாரோ நகரத்தின் சாலைகளில் ஒன்று கூடுவார்கள். ஹாரோ நகர மேயர் குதிரையின் மீது செல்ல அனைவரும் ஊர்வலமாக அங்குள்ள பிலிபியோ என்ற மலைஉச்சியை நோக்கி செல்வார்கள். அந்த மலையுச்சியிலுள்ள ஒரு தேவாலயத்தை அடைந்தவுடன் அனைவரும் ஒருவர் மீது ஒருவர் ஒயினை ஊற்றி கொண்டாடுவார்கள்.

இந்த ஆண்டும் ஜூன் 29ம் தேதி, ஹாரோ நகரத்தில் இந்தக் கொண்டாட்டம் நடைபெற்றது. நீர் துப்பாக்கியில் ஒயினை ஊற்றி ஒருவர் மீது ஒருவர் தெளித்தும், பக்கெட்டுகளில் கொண்டு வரப்பட்ட ஒயினை மற்றவர்கள் மீது ஊற்றியும் திருவிழாவை உற்சாகமாக கொண்டாடினர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close