பிரான்சில் கலவரம்: உலகக் கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தில் வன்முறை 

  Padmapriya   | Last Modified : 16 Jul, 2018 12:48 pm
violence-and-riots-break-out-in-paris-after-french-world-cup-victory

உலகக்கோப்பையை வென்ற பிரான்ஸில் நடைபெற்ற வெற்றிக் கொண்டாட்டத்தின்போது வன்முறை வெடித்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார். குழந்தைகள் உட்பட பலரும் படுகாயமடைந்தனர். 

ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பையை 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வென்றது பிரான்ஸ். குரேஷியாவுக்கு எதிரான நேற்றைய இறுதி சுற்று ஆட்டத்தில் 4-2 என்ற கோல் கணக்கில் கோப்பையை வென்றது பிரான்ஸ். 1998க்குப் பிறகு, இரண்டாவது முறையாக பிரான்ஸ் கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில் இந்த வெற்றிக் களிப்பை பிரான்ஸ் மக்கள் ஒன்று கூடி கொண்டாடி மகிழ்ந்தனர். முக்கிய இடங்களில் கூடியிருந்த ரசிகர்கள் சாலையில் ஆடிப் பாடி கொண்டாடி மகிழ்ந்தனர். பட்டாசுகளை வெடித்தும் சாயங்களை பூசியும் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

அப்போது பிரான்ஸ் தலைநகர் பாரீஸின் அண்சே பகுதியில் முகமூடி அணிந்த சிலர் கடைகளுக்குள் புகுந்து ஒயின், மதுபானங்கள், கிடைத்த பொருட்களை தூக்கி சென்றனர். சிலர் குப்பைதொட்டிகளுக்கு தீ வைத்தனர். இதை தடுக்க முயன்ற போலீசார் மீது பாட்டிகள், கற்களை வீசித தாக்குதல் நடத்தினர். பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. 

கட்டுப்படுத்த முடியாத நிலையில் போலீசார், வேறு வழியில்லாமல் கண்ணீர் புகைகுண்டு வீசி அவர்களை விரட்டினர். இந்த கலவரத்தால் அங்கு பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி சிறு குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்தனர். அதேப் பகுதியில் 50 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். உலகக்கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட இந்த கலவரம் பிரான்ஸை சோகத்தில் ஆழ்த்தியது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close