ஜெர்மனியில் ஓடும் பேருந்தில் 14 பேர் மீது மர்ம நபர் கத்திக்குத்து

  Padmapriya   | Last Modified : 21 Jul, 2018 10:32 am
knife-attack-in-germany-wounds-at-least-14-people

ஜெர்மனியில் ஓடும் பேருந்தில் இருந்த சக பயணி ஒருவர் திடீரென மற்றவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக கத்திக்குத்தில் ஈடுபட்டதில் 14 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனி வடக்கு பகுதியில் உள்ள லூயிபெக் நகரில் சென்று கொண்டிருந்த பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த நபர் ஒருவர் தான் அமர்ந்திருந்த இருக்கையை வயதான பெண் ஒருவருக்கு விட்டுக்கொடுத்துள்ளார். அப்போது அருகில் இருந்த மற்றொரு நபர் இறுக்கையை விட்டுக்கொடுத்தவரின் மார்பில் திடீர் என கத்தியால் குத்தியுள்ளார்.

தொடர்ந்து, கண்ணிமைக்கும் நேரத்தில் அருகே இருந்த பலரையும் அந்த நபர் கத்தியால் குத்தி தாக்கியுள்ளார். பேருந்தில் இருந்த பயணிகள் செய்வது அறியாமல் திகைத்த நேரத்தில், பேருந்து ஓட்டுனர் சாலை ஓரமாக வண்டியை நிறுத்தினார். பின்னர் பயணிகள் அனைவரும் அலறியடித்து சாலைகளில் ஓடினர். மர்ம நபர் நடத்திய கத்திக்குத்துச் சம்பவத்தில் மொத்தம் 14 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த தாக்குதலை நடத்திய 34 வயது மதிக்கத்தக்க மர்ம நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இருப்பினும் அவர் இந்த தாக்குதல் நடத்தியதற்கான காரணம் குறித்து முதற்கட்டத் தகவல் எதுவும் தெரியவில்லை என ஜெர்மனி போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close