தோண்ட தோண்ட தங்கப் புதையல்: 2,800 ஆண்டுகள் பழமையானது 

  Padmapriya   | Last Modified : 31 Jul, 2018 08:18 pm

2-800-year-old-royal-gold-jewelery-stash-found-in-the-mountains-of-eastern-kazakhstan

கஜகஸ்தானின் கிழக்கு மலைப்பகுதியில் விலைமதிப்பற்ற பழங்கால அரசர்களின் தங்க ஆபரணங்கள் மற்றும் பொருட்கள் குவியல் குவியலாக தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. இவை 2,800 ஆண்டுகள் பழமையானவை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

கஜகஸ்தானின் கிழக்கே தார்பகட்டாய் மலைகள் உள்ளன. மத்திய ஆசிய பகுதியான இங்கு சுமார் 8 நூற்றாண்டுகளுக்கு முன்னர் சாகா என்ற இன மக்கள் வாழ்ந்ததாக வரலாற்று சான்றுகள் உள்ளன. இந்த இன மக்கள் அனைவரும் செல்வந்தர்களாக இருந்ததற்கான ஆதரங்களும் உள்ளன.

இந்த நிலையில் அதே மலைப் பகுதியில் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்த ஆய்வில் சுமார் 3000 தங்க ஆபரணங்கள், தங்க முலாம் பூசிய பொருட்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. குவியல் குவியலாக இருக்கும் இவை மிகவும் விலை மதிப்பில்லாதது, சுமார் 2,800 ஆண்டுகள் பழமையானது என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். 

அதில், உடைகளில் அணிவிக்கப்படும் தங்க மணிகள், மிகவும் நுண்ணிய சால்டெரிங் முறையில் செய்யப்பட்ட நகைகள் உள்ளன. இவை அனைத்தும் தற்காலத்தில்,  தொழில்நுட்ப உதவியுடன் வடிவமைக்கப்படும் நகைகளைக் காட்டிலும் மிகவும் நுட்பமான, நேர்த்தியான வேலைப்படுகள் இடம்பெற்றுள்ளன. இந்த வேலைப்பாடுகள், அம்மக்களின் ரசனையையும் அவர்களின் செல்வசெழிப்புகளுக்கு சான்றாக திகழ்கிறது. 

இதுத் தவிர, சாகா மக்களின் கல்லறைகளும் மலைகளுக்கு அடிவாரத்தில் இருப்பது அறியப்பட்டுள்ளது.

அதிலும் மிகவும் அரிதான பொருட்கள் இருக்கும் என அங்கு ஆய்வில் ஈடுபட்டுள்ள பேராசிரியர் ஸைனோலா சானாஷேவ் தெரிவித்துள்ளார். அகழ்வாராய்ச்சி மேற்பார்வையாளரான இந்த கண்டுபிடிப்புகள் குறித்து கூறும்போது, "சாகா மக்கள் இந்தப் பகுதியில் தங்களது கல்லரைகளை அமைத்திருப்பது தெரியவந்துள்ளது.  இதைப் பார்க்கும்போது மூதாதையர்கள் குறித்து இருந்தப் பார்வையே முற்றிலும் மாறுபடுகிறது. சுரங்கம் அமைப்பது, தாதுக்களை பிரித்தெடுப்பது, வர்த்தகம், நகைகள் தயரித்தல் என நாம் இப்போது தொழில்நுட்பத்தைக் கொண்டு செய்வதைக் காட்டிலும் அபாரமாக எல்லாவற்றிலும் சிறந்து விளங்கியுள்ளனர்.  இவர்கள் சொர்க்கத்து வாழ்க்கையை வாழ்ந்துள்ளனர். அதே நேரத்தில் மிகவும் உழைத்துள்ளனர். இவற்றில் பலவற்றை வெவ்வேறு காலகட்டத்தில் கொள்ளையடிக்கப்பட்டதும் தெரிகிறது" என்றார்.  

தார்பகட்டாய் மலைப்பகுதியில் முதன் முதலாக 2 வருடங்களுக்கு முன் பழங்கால நகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. பின்னர் அங்கு ஆய்வு துரிதப்படுத்தப்பட்டது. அதற்கு முன் அங்கு ரஷ்ய ஆட்சியாளர்கள் அங்கிருந்தப் பொருட்களை எடுத்து சென்றதற்கும் வரலாறு உள்ளது. 

Newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.