செங்குத்தாக தரையில் மோதிய விமானம்; 20 சுற்றுலா பயணிகள் பலி

  Newstm Desk   | Last Modified : 05 Aug, 2018 07:08 pm
flight-crashes-straight-into-ground-20-dead

ஸ்விட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஒரு சுற்றுலா நிறுவனத்துக்கு சொந்தமான விமானம், ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானதில், 20 பேர் பலியாகினர்.

ஜெ.யு ஏர் என்ற தனியார் சுற்றுலா நிறுவனத்தின் சிறிய ரக பழங்கால மாடல் விமானம், நேற்று 17 சுற்றுலா பயணிகளுடன் புறப்பட்டது. அருகே உள்ள சில பகுதிகளை பயணிகளுக்கு காட்டி வந்தபோது, திடீரென விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 17 பயணிகள், 3 விமான பணியாட்கள் உயிரிழந்தனர். 

விமானம், அதிவேகத்தில் செங்குத்தாக விழுந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். "ஆனால்,  விமானம் தரையில் மோதுவதற்கு முன்னதாக வேறு எதிலும் மோதியதாக தெரியவில்லை. வேறு எந்த விமானத்தோடோ, கம்பிகளின் மீதோ மோதவில்லை" என ஸ்விட்சர்லாந்து போக்குவரத்துத் துறை விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அனைத்து விமான சேவைகளையும் ஜெ.யு நிறுவனம் நிறுத்தியுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close