இத்தாலியில் டாங்கர் லாரி வெடித்து சிதறி 60 பேர் காயம்..இருவர் பலி!

  Newstm Desk   | Last Modified : 08 Aug, 2018 02:53 am

tanker-truck-explodes-on-highway-in-italy-killing-at-least-2-people

இத்தாலி நாட்டின் பொலாக்னா விமான நிலையம் அருகே சென்று கொண்டிருந்த டாங்கர் லாரி மீது மற்றொரு வாகனம் மோதியதில் 2 பேர் பலியாகினர். மேலும் 60 பேர் காயமடைந்தனர். விபத்தின் காரணமாக ஏற்பட்ட புகை மூட்டம் வானாளாவியதாக பெருக்கெடுத்ததால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது. 

இத்தாலி நாட்டின் பொலாக்னா விமான நிலையம் அருகே உள்ள மேம்பாலம் மீது வாகனங்கள் சென்று கொண்டிருந்தது. அப்போது போக்குவரத்து நெரிசலில் நின்று கொண்டிருந்த டாங்கர் லாரி மீது மற்றொரு வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. டாங்கர் லாரியில் தொழிற்சாலையிலிருந்து ஏற்றப்பட்ட கார்கள் நிரம்பி இருந்தன. விபத்து ஏற்படுத்திய வாகனத்தில் எரிவாயு இருந்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்த சம்பவத்தில் டாங்கர் லாரி வெடித்து சிதறி வான்வரையிலான உயரத்துக்கு தீ கிளம்பியது. இந்த விபத்தில் 2 பேர் பலியாகினர்.  மேலும், 60 பேர் காயமடைந்தனர்.  விபத்தால் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.  லாரிகள் வெடித்து சிதறியதில் ஏற்பட்ட தீயானது பாலத்தின் கீழ் இருந்த கார் நிறுத்தும் இடத்திற்கும் தீ பரவியது.  இதனால் அங்கிருந்த வாகனங்களும் தீப்பற்றி எரிந்து வெடித்து சிதறின. 

தீயணைப்பு வாகனங்களும் மற்றும் ஆம்புலன்சுகளும் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்றன.  காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். இந்த மோசமான விபத்தின் காட்சிகள் பற்றிய வீடியோ இணையத்தில் இடம்பெற்றுள்ளது. 

 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close