அமெரிக்காவின் இரட்டை வரிவிதிப்பு: துருக்கி பணமதிப்பில் கடும் வீழ்ச்சி

  Padmapriya   | Last Modified : 11 Aug, 2018 06:19 pm

tensions-between-turkey-and-u-s-soar-as-trump-orders-new-sanctions

துருக்கியின் ஏற்றுமதி பொருட்களுக்கு அமெரிக்கா இரட்டை வரிவிதித்துள்ளது. இதனால் துருக்கியின் பணமான லிரா அமெரிக்காவின் டாலர் மதிப்புக்கு எதிராக கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. 

துருக்கியின் இரும்பு, அலுமினியம் போன்றவற்றின் இறக்குமதி வரியை அமெரிக்கா இரட்டிப்பாக உயர்த்தியது. இதன் காரணமாக அந்நாட்டின் பணமதிப்பு வெகுவாக சரிந்துள்ளது. 13 சதவீதம் குறைந்துள்ளது.

இது குறித்து ட்ரம்ப் கூறுகையில், "துருக்கியிலிருந்து இறக்குமதியாகும் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கான இறக்குமதி வரியை இரண்டு மடங்கு உயர்த்தியுள்ளேன்.  நம்முடைய வலுவான டாலருக்கு முன்னால் துருக்கியின் லிரா சரிந்துள்ளது. துருக்கியுடனான நமது உறவு சுமுகமாக இல்லை" என்று பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் இந்த வரிவிதிப்பை துருக்கி கண்டித்துள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவு இரு நாடுகளுக்கிடையே அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கிடையேயான உறவை இது பாதிக்கலாம் என்று துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவத்துள்ளது. 
 
வரிவிதிப்புக்கு காரணம்:

முன்னதாக ரஷ்யாவிடமிருந்து ஏவுகணைகள் வாங்கியதற்காக துருக்கி மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தது. அதனால் அதன் பொருளாதாரத்தில் சிக்கல் ஏற்பட்டது. அதோடு ஈரானு மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளை துருக்கி கண்டித்தது.  மேலும், ஈரானிடம்  இருந்து  கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தப் போவதில்லை என்றும்  துருக்கி திட்டவட்டமாக தெரிவித்தது. 

எனவே தற்போது துருக்கி மீதான வரிவிதிப்புக்கு இரானுடன் இணக்கமாக போனது தான் என்பது தெளிவாகியுள்ளது. 

அணு குண்டு தயாரிப்பை நோக்கி சென்று கொண்டிருந்த ஈரானை தடுக்க, பல பொருளாதார தடைகளை சர்வதேச நாடுகள் விதித்தன. எண்ணெய் ஏற்றுமதியை மையமாக கொண்ட ஈரான் பொருளாதாரம் பெரிதும் பாதித்தது. வேறு வழியே இல்லாமல், ஒரு சர்வதேச உடன்படிக்கையில் கையெழுத்திட ஈரான் முன்வந்தது. அதன்படி, தடைகளை நீக்கவும், ஈரானுடன் மீண்டும் வர்த்தகத்தை தொடங்கவும் உறுதியளிக்கப்பட்டன. தனது பங்கிற்ரு ஈரானும், அணு ஆயுத தயாரிப்பை தடுக்கும் பல நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தர உறுதியளித்தது. அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஆனால் ஒபாமா காலகட்டத்தில் செய்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. 

அமெரிக்கா விலகியது மட்டுமல்லாமல், மற்ற நாடுகளும் இதிலிருந்து விலக வேண்டும் என ட்ரம்ப் கூறியுள்ளார். ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் மீது அமெரிக்கா தடைகளை விதிக்கும் என்றும் எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close