வாடிக்கையாளரை காப்பாற்ற உயிரை விட்ட பிரான்ஸ் பாலியல் தொழிலாளி

  Padmapriya   | Last Modified : 29 Aug, 2018 04:01 am
five-charged-with-murdering-transgender-sex-worker-who-was-reportedly-trying-to-stop-a-robbery

பிரான்சில் தனது வாடிக்கையாளரை கொள்ளைக்காரர்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக தனது உயிரையே தியாகம் செய்துள்ளார் அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்ட ஒரு திருநங்கை. 

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வனேசா காம்போஸ் (36) என்ற திருநங்கை, பூங்கா ஒன்றில் தனது வாடிக்கையாளர் ஒருவரை திருடர்களிடமிருந்து காக்கும் முயற்சியில் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக ஐந்து பேர் மீது பிரான்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  

பிரான்சில் பாலியல் தொழில் செய்வது சட்ட விரோதமானது என்பதால் பூங்கா ஒன்றில் பாலியல் தொழிலாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை சந்தித்து வந்தனர். அங்கு தனது வாடிக்கையாளர் ஒருவரை சந்திக்க சென்றபோது சுமார் 10 பேர் கத்தி, தடிகள் மற்றும் துப்பாக்கிகளுடன் அந்த நபரின் காரை திருட முயன்றனர்.

அப்போது இடையே பாய்ந்த வனேசா வாடிக்கையாளரை தடுக்க முயன்றபோது அங்கிருந்த நபர் ஒருவர் வனேசாவை துப்பாக்கியால் சுட்டான்.  அதில் மார்பில் குண்டு பாய்ந்த நிலையில் உதவி கோரி குரல் எழுப்பியுள்ளார். ஆனால் அவரது நண்பர்கள் வந்து பார்க்கும்போது இறந்து இருந்தார்.

இந்த படுகொலை சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு பாலியல் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் பேரணி ஒன்றை நடத்தினர்.  பாலியல் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கோரி வனேசாவின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று எழுதப்பட்ட அட்டைகளுடன் ஏராளமானோர் பேரணி ஒன்றில் பங்கேற்றனர். இது தொடர்பாக இது வரை எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close