பாரீஸில் தொடரும் கத்திக்குத்து தாக்குதல்: 4 பேர் கவலைக்கிடம் 

  Padmapriya   | Last Modified : 10 Sep, 2018 08:23 pm
paris-knife-attack-two-british-tourists-among-seven-wounded

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கத்தி மற்றும் இரும்புக் கம்பி கொண்டும் மர்ம நபர் பொது மக்கள் மத்தியில் தாக்குதல் நடத்தியதில் 7 பேர் காயமடைந்துள்ளனர். 

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கத்தி மற்றும் இரும்புக் கம்பி வைத்து மர்ம நபர் பொது மக்களைத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் 7 பேருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படாத நிலையிலும் அதில் 4 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக பாரீஸ் போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது. 

மர்ம நபர் பாரீஸ் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது விவரம் குறித்து எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. அவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவராக இருக்க வாய்ப்புள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.  மேலும், இது தீவிரவாத தாக்குதலாக இருக்க முடியாது என்றும் போலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், பாரீஸ் நகரத்தின் வடகிழக்குப் பகுதியில் நேற்றிரவு சுமார் 11 மணி அளவில் இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தை நேரில் பார்த்த யூசப் நஜா என்பவர் போலீசாரிடம் கூறியதாவது, ''நான் வடகிழக்குப் பகுதியில் உள்ள கால்வாய்க்கு அருகில் சென்று கொண்டிருந்தேன். அப்போது கத்தியுடன் ஒரு நபர் ஓடி வருவதைப் பார்த்தேன். 

அவரை சுமார் 20க்கும் மேற்பட்டோர் துரத்திக் வந்தனர். அப்போது அவர் சாலையில் சென்ற பிரிட்டனை தம்பதி பின்னால் சென்ற மறையப் பார்த்தான். அப்போது, மர்ம நபரை துரத்தி வந்தவர்கள், 'அவனிடம் கத்தி உள்ளது. ஜாக்கிரதை' என்று கூச்சலிட்டனர். அதற்குள் செய்வது அறியாது நின்ற பிரிட்டன் தம்பதியை அவன் கத்தியால் தாக்கிவிட்டான்' என்றார். 

பாரீஸில் தொடர்ந்து கத்தியைக் கொண்டு தாக்குதல் சம்பவம் நடந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரம் குறித்து போலீஸ் விசாரணையில் ஈடுபட்டுள்ளது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close