மீண்டும் பலி கொண்ட மத்திய தரைக்கடல்: நூற்றுக்கணக்கான அகதிகள் பலி 

  Padmapriya   | Last Modified : 12 Sep, 2018 04:58 pm
dozens-of-migrants-die-off-libyan-coast

லிபியாவில் இருந்து இத்தாலிக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து 100க்கும் மேற்பட்டோர் பலியாகியதாக எல்லைகள் இல்லாத மருத்துவர் அமைப்பு தெரிவித்துள்ளது. 

இத்தாலி நோக்கி லிபிய கடல் பகுதியில் இருந்து சூடான், மாலி, நைஜீரியா, கேமரூன், கானா, லிபியா, அல்ஜீரியா, எகிப்து ஆகிய நாடுகளை சேர்ந்த அகதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற 2  ரப்பர் படகுகளில் ஒன்று மத்திய தரைக் கடலில் விபத்துக்குள்ளானது. இதில் 100 அகதிகள் பரிதாபமாக பலி ஆகியதாக எல்லைகள் இல்லாத மருத்துவர்கள் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. 

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் லிபிய கடலோரக் காவல் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 276 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 

லிபிய கடல் பகுதியில் இருந்து சூடான், மாலி, நைஜீரியா, கேமரூன், கானா, லிபியா, அல்ஜீரியா, எகிப்து ஆகிய நாடுகளை சேர்ந்த மக்கள் உள்நாட்டு பிரச்னை, பொருளாதார நெருக்கடி போன்ற பிரச்னைகளால் அகதிகளாய் ஆபத்தான மத்திய தரைக்கடலில் சட்டவிரோத பயணம் மேற்கொள்கின்றனர்.

ஐரோப்பிய நாடுகளுக்கு இவர்கள் செல்லும் படகுகள் அவ்வப்போது மத்திய தரைக்கடலில் விபத்துக்குள்ளாகிறது. 2014க்குப்பின் நீண்ட துாரம் ஆபத்தான வழியாகவும் உள்ள இத்தாலிக்கு அகதிகள் செல்ல தொடங்கியுள்ளனர். இதனால் உயிரிழப்பும் அதிகரிப்பது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

இதுவரை 1500 பலி : மத்திய தரைக்கடலில் இந்தாண்டில் இதுவரை 1,500 அகதிகள் பலியாகியுள்ளனர். இதற்கு முன் அகதிகள் 2014ல் 3,500 பேர், 2015ல் 3,750 பேர், 2016ல் 5,000 பேர், 2017ல் 3,100 பேர் பலியாகினர்.

- newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close