ரஷ்யாவில் பேருந்தில் தேவாலயம்!- இது தான் முதன்முறை 

  Newstm Desk   | Last Modified : 18 Sep, 2018 05:05 am
the-only-bus-church-in-russia-presented-in-moscow

ரஷ்யாவில், பொதுப் பேருந்தை தேவாலயமாக பாதிரியார் ஒருவர் மாற்றியுள்ளது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பேருந்தில் தேவாலயம் அமைக்கப்பட்டது உலக அளவில் இது தான் முதல் முறை என்பது இந்த சிறப்பம்சம். 

ரஷ்யாவின் சில மாகாணங்களில் தேவாலயங்கள் இல்லை என அந்த சமூக மக்கள் குரைத் தெரிவித்து வருகின்றனர். இதனைக் கேட்ட ஆண்ட்ரெய் ஸ்ட்ரெப்கோவ் என்ற பாதிரியார், தற்காலிகமாக அவரே செலவு செய்து கூடாரம் செய்து தேவாலயமாக அமைத்து வழிபாட்டாளர்களுக்கு உதவி செய்து வந்தார்.

ஆனால் பின்னர் இந்த கூடாரம் மழை, புயலின் போது சேதமடைந்ததைத் தொடர்ந்து அவர் பேருந்து ஒன்றை தேவாலயமாக மாற்றியுள்ளார். இந்த பேருந்து ரஷ்யாவின் குறுகிய கிராமங்களுக்குள்ளும் கொண்டு சென்று பக்தர்கள் வழிபாடு செய்ய ஏற்பாடும் செய்து வருகிறார். 

பக்தர்களுக்காக கூடாரமிட்டு தான் செய்த தொண்டினை விட  பேருந்து மூலம் இப்போது முன்னெடுத்து வரும் தொண்டு மிகுந்த மனமகிழ்ச்சி அளிப்பதாக ஆண்ட்ரெய் கூறியுள்ளார். 7 வருடங்களுக்கு முன் தொடங்ககப்பட்ட இந்த பேர்ந்து தேவாலயம் இதுவரை 30 கிராமங்களை அடைந்துள்ளது. பின்னர் வழக்கம் போல இது மாஸ்கோவுக்கு திரும்பியுள்ளது. முக்கிய நாட்களில் மற்ற நகரங்களுக்கும் இந்த பேருந்து சென்று வருகிறது. இந்த தேவாலயம் அதிகளவில் இளைஞர்களையும் சிறுவர்களையும் ஈர்த்துள்ளது. 

சமீபத்தில் ரஷ்யாவில் நடந்த 3வது சர்வதேச பழமைவாத இளைஞர்கள் மன்றத்திலும் இந்த பேருந்து தேவாலயம் காட்சியகப்படுத்தப்பட்டது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close