இரட்டை கோபுரத் தாக்குதல்: கூட்டாளியை விடுவிக்கும் ஜெர்மனி 

  Padmapriya   | Last Modified : 16 Oct, 2018 05:51 pm
germany-deports-man-convicted-over-9-11-terror-attack-17-years-after-atrocity

கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி நடந்த அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலில் தொடர்புடையவரின் கூட்டாளியை ஜெர்மனி அந்நாட்டு சிறையிலிருந்து விடுதலை செய்து நாடு கடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

வட ஆப்பிரிக்க நாடான மொரோக்கோவை சேர்ந்தவர் மவுனி அல்-மொசாஸாடெக். இவர் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட விமானத்தில் இருந்த பயணிகளின் உயிரிழப்பதற்கு காரணமாக இருந்த குற்றச்சாட்டுக்காக, சுமார் 15 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வந்தார். 

தனது தண்டனை காலத்தில் பெரும்பகுதியை அனுபவித்துவிட்ட இவர் தற்போது மொரோக்கோவிற்கு நாடு கடத்தப்படுவதாக ஜெர்மன் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 

தனக்கும், 9/11 சம்பவத்துக்கும் தொடர்பில்லை என்று மொசாஸாடெக் தொடர்ந்து கூறி வந்தாலும், இந்த தாக்குதலை நடத்தியவர்களின் நண்பராக இவர் இருந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டது.

அல்-மொசாஸாடெக் 1993 ஆம் ஆண்டு தனது பொறியியல் படிப்பைத் தொடர ஜெர்மனி சென்றார். அங்கு தான் அவர் இரட்டை கோபுரத்தை தகர்க்க பயன்படுத்தப்பட்ட போயிங் 767-200 விமானத்தின் விமானியை சந்தித்து தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். 

தாக்குதலுக்கு பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த விமான ஓட்டியின் வங்கி கணக்குகளை இயக்க அதிகாரம் பெற்ற நபராக மவுனி அல்-மொசாஸாடெக் இருந்தது தெரியவந்தது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close