மெட்ரோ ரயில் எஸ்கலேட்டர் செயலிழப்பு: 20 கால்பந்தாட்ட ரசிகர்கள் காயம் (அதிர்ச்சி வீடியோ)

  Padmapriya   | Last Modified : 24 Oct, 2018 06:12 pm
over-20-injured-as-out-of-control-escalator-comes-speeding-down-in-rome

இத்தாலியில் மெட்ரோ ரயில் நிலைய எஸ்கலேட்டர் திடீரென செயலிழந்து ஏற்பட்ட விபத்தில் அதில் பயணம் செய்தவர்கள் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து காயம் அடைந்தனர். இந்த மோசமான விபத்தின் காட்சிகள் காண்போரை பதைபதைக்க வைப்பதாய் உள்ளது.

இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஒரு மெட்ரோ ரயில் நிலையத்தின் எஸ்கலேட்டர் திடீரென செயல் இழந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக எஸ்கலேட்டர் அதி வேகமாக நகர்ந்ததில் அதில் நின்று கொண்டிருந்தவர்கள் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து மோசமான விபத்து நேரிட்டது. உள்ளூர் நேரப்படி மாலை 5.30 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. 

இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பதரவைப்பதை உள்ளது. விபத்தில் சிக்கி காயமடைந்தவர்கள் பெரும்பாலானோர் ரஷ்ய நாட்டினர். கால்பந்து போட்டி ஒன்றைக் காணவந்த ரசிகர்கள் என்று இத்தாலி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இத்தாலியில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி நடந்து வருகிறது. இதில் இத்தாலின் ரோமா அணியும் ரஷ்யாவின் கிளப் அணியான சிஎஸ்கேஏ மாஸ்கோ அணிகளும் மோதுகின்றன. இதனைக் காண சென்ற ரசிகர்களே விபத்தில் சிக்கியதாக இத்தாலி செய்தி தொலைக்காட்சிகளில் குறிப்பிடுகின்றன.

 

 

 

Newstm.in 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close