ஜெர்மனியில் அதிர்ச்சி: அபரிவிதமாக மருந்து கொடுத்து 100 பேரை கொன்ற செவிலியர் 

  Padmapriya   | Last Modified : 29 Oct, 2018 02:02 pm
germany-tries-serial-killer-nurse-over-worst-post-war-spree

 ஜெர்மனியில் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்த அளவில்லாமல் அதிக வீரியமான மருந்தை கொடுத்து செவிலியர் ஒருவர் 100 பேரை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஜெர்மனியை சேர்ந்த ஆண் செவிலியர் நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் அங்குள்ள ஓல்டன்பெர்க், டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் செவிலியராக பணிபுரிந்தார். இவர் நோயாளிக்கு அளவுக்கு மீறி ஊசி மருந்து மற்றும் மாத்திரைகளை கொடுத்து வந்துள்ளார். அதில் பலரும் உயிரிழந்துள்ளனர். 

கடந்த 2005-ம் ஆண்டில் டெல்மென் ஹார்ஸ்ட் மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு மருத்துவர் பரிந்துரைக்காத அளவுக்கு அதிகமான வீரிய சக்தி கொண்ட ஊசி போட்டபோது வசமாக சிக்கினார். இதனால் கைது செய்யப்பட்ட அவருக்கு கடந்த 2008-ம் ஆண்டில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனிடையே இவரது சிகிச்சையின் காரணமாக மேலும் பலர் உயிரிழந்தது அம்பலமானது. 

அதன்படி டெல்மென் ஹார்ஸ்ட் மருத்துவமனையில் கடந்த 2000 முதல் 2005-ம் ஆண்டு வரை 65 பேரும், ஒல்டன்பர்க் மருத்துவமனையில் 35 பேரும் இவரால் உயிரிழந்தது தெரியவந்தது. இந்த கொலைகள் குறித்து ஓல்டன்பெர்க் நகர கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தை மிகப் பெரிய குற்றச்செயலாக ஊடகங்களால் வர்ணிக்கப்படுகிறது. அதாவது ஜெர்மனியில் உலகப் போருக்கு பிறகு நடந்த மிகப்பெரிய குற்ற சம்பவமாக இது கருதப்படுகிறது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close