2.5 லட்சம் டாலர் மதிப்பில் ஏலம் போன கவிஞனின் தற்கொலைக் கடிதம் 

  Padmapriya   | Last Modified : 05 Nov, 2018 01:06 pm

french-poet-baudelaire-suicide-letter-fetches-234-000-at-auction

பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரான்ஸ்  நாட்டுக் கவிஞன் சார்லஸ் போடெலேரின் இளவயது கால தற்கொலை கடிதம் 2,67,000 அமெரிக்க டாலர்களுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது. அது அவரது காதலி ஜீன் டூவலுக்கு 1845 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி எழுதியதாகும். 

பிரான்ஸைச் சேர்ந்த கவிஞர் சார்லஸ் போடெலேர். பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த இவர் தனது 24வது வயதில் தற்கொலைக் கடிதம் ஒன்றை தனது காதலிக்கு எழுதியுள்ளார். "இந்த கடிதம் உனக்கு கிடைக்கும் போது, நான் மரணித்து இருப்பேன்" என்று குறிப்பிடப்பட்ட அந்தக் கடிதம் தான் நிர்ணயக்கப்பட்ட தொகையைவிட மூன்று மடங்கு தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டதாக பிரான்ஸ் ஏல இணையதளமான ஒஸ்நாட் குறிப்பிட்டுள்ளது. 

ஆனால் கடிதம் எழுதப்பட்ட அதே நாளில் தற்கொலைக்கு முயன்றவர் பிழைத்துக் கொண்டார். அந்த தற்கொலை முயற்சிக்குப் பின் 22 ஆண்டுகாலம் வாழ்ந்தார். பரம்பரை சொத்தை வீணாக்கியதால் நிதி நெருக்கடியில் இருந்த சார்லஸ், தன்னைதானே மார்பில் கத்தியால் குத்திக் கொண்டார். ஆனால், பெரிய காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.
 
பிரான்ஸ் கவிஞர்களுக்கு ஓர் முன்னோடியாக திகழ்ந்த இவரது கவிதை தொகுப்புகள் இன்றளவும் பிரபலமானதாகும்.  அவரது  Les Fleurs du Mal ('தீய மலர்கள்') தொகுப்பு அவருக்கும் பேர் தேடித் தந்தது. 

Newstm.in 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.