வாடகை லம்போகினி காரில் சிங்கக்குட்டி கடத்தல்!- பிரான்ஸில் தொடரும் சம்பவங்கள் 

  Newstm Desk   | Last Modified : 14 Nov, 2018 09:49 am
lion-cub-found-in-lamborghini-by-paris-police

பிரான்ஸில் சிங்கக்குட்டி ஒன்று லம்போகினி ஆடம்பர காரில் வைத்து கடத்தி சென்றதாகவும், அக்குட்டியை செல்லப்பிராணியாக வளர்பதற்க்காக பிடிக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது. 

பிரான்ஸின் பாரிஸ் நகரில் சிங்கக்குட்டி ஒன்று லம்போகினி காரில் போவதை கண்ட மக்கள் சிலர் சந்தேகத்தின் பேரில் கொடுத்த புகாரையடுத்து போலீசார் நடத்திய சோதனையில் சிங்கக் குட்டி பத்திரமாக பிடிபட்டது. இது குறித்து கார் ஓட்டுனரிடம் விசாரணை நடத்திய போலீசார்க்கு அந்த சிங்கக்குட்டியை, வாடகைக்கு எடுக்கப்பட்ட லம்போகினிகாரில் வைத்து கடத்தி சென்றதாகவும், அக்குட்டியை செல்லப்பிராணியாக வளர்பதற்க்காக பிடிக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது. 

இதனை அடுத்து அந்த சிங்கக்குட்டியை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியானது.

பாரிஸில் கடந்த மாதமும் இதே போல ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சிங்கக்குட்டி போலீசாரிடம் பிடிபட்டது. நீதிமன்றத்தில் வைத்து விசாரித்தபோது, இந்த வழக்கு தனிபட்டதில்லை என்னும் இதற்கும் வேறு 3 கடத்தல் சம்பவத்திற்க்கும் தொடர்புள்ளதாகவும் தெரிய வந்தது.

அந்த குட்டிகள் தலைநகருக்கு வெளியே இருப்பதாக‌ தகவல் வெளியானது. இந்த செயலில் ஈடுபட்ட நபருக்கு 6 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் பிரான்ஸ் நாட்டிலுள்ள மார்சாலி நகரத்தில் உள்ள ஒரு கார் கேரேஜில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டது. அக்குட்டிகளை தற்போழுது வன விலங்குகளை பாதுகாக்கும் அரசு சாரா அமைப்பு கவனித்து வருகிறது.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close