கிரீஸ் பேரணியில் கலகம்: போராட்டக்காரர்கள் - போலீஸ் பரஸ்பர தாக்குதல் 

  Newstm Desk   | Last Modified : 18 Nov, 2018 11:20 am
greece-police-anarchists-mark-1973-uprising-with-clashes

கிரீஸ் தலைநகர் ஏதென்ஸில் போராட்டக்காரர்களும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலின்போது ஒருவருக்கொருவர் பெட்ரோல் குண்டுகளை வீசியெறிந்து தாக்கிக் கொண்டதால் அங்கு கலவரம் வெடித்தது. 

1967-74 வரை கிரீஸில் நடந்த ராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு அமெரிக்கா துணை நின்றதாக கிரேக்க தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. அப்போது அதனை எதிர்த்து 1973ஆம் ஆண்டு நடைபெற்ற மாணவர் புரட்சியின் 45வது ஆண்டை நினைவும் கூரும் வகையில், கிரீஸ் தலைநகரமான ஏதென்சில் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் இணைந்து அமெரிக்க துணை தூதரகம் நோக்கி பேரணியாக சென்றனர். இந்தப் பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்ததால், இருதரப்புக்கும் இடையே கலகம் ஏற்பட்டது.  அதன் இறுதியில், போராட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி எரிந்து தங்கள் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர். பதிலுக்கு போலீசாரும் கையெறி குண்டுகளையும் கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் ஒடுக்கினர்.  

போலீசார் மீது தாக்குதல் நடத்தியதாக பலரும் கைது செய்யப்பட்டனர். இந்த கலவரத்தில் உயிரிழப்பு ஏற்பட்டதா என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை. 

ஆர்ப்பாட்டத்தை ஒடுக்க 6,000 போலீசார் களத்தில் இறக்கப்பட்டனர். அதே போல தேசாலோங்கி நகரத்திலும் சுமார் 15,000 மக்கள் பேரணியில் சென்றனர். அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கலவரம் உண்டானது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close