ரஷ்யாவுக்கு அதிர்ச்சி தந்து தென்கொரியர் இன்டர்போல் தலைவராக தேர்வு 

  Newstm Desk   | Last Modified : 21 Nov, 2018 07:36 pm
interpol-elects-south-korean-as-its-president-in-blow-to-russia

ர்வதேச காவல்துறையான இன்டர்போலின் புதிய தலைவராக தென்கொரியாவை சேர்ந்த கிம் ஜாங்-யாங் இன்று தேர்வு செய்யப்பட்டார். பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு பெற்ற இவர் ரஷ்ய போட்டியாளரை முந்தி தலைவராக வெற்றி பெற்றார். 

தென்கொரியாவை சேர்ந்த கிம் ஜாங்-யாங் இன்டர்போல் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். அவரை எதிர்த்து ரஷ்ய உள்துறை அமைச்சக உயரதிகாரியும், இன்டர்போல் துணை தலைவராக பதவி வகித்தவருமான அலெக்சாண்டர் பிரோகோப்சுக் நிறுத்தப்பட்டார். இவரை இந்த பதவியில் நியமிக்க பல்வேறு மேற்கத்திய, ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

இந்த நிலையில், புதிய தலைவரை தேர்ந்தெடுக்க துபாயில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் பெரும்பான்மையான உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் கிம் ஜாங்-யாங் தேர்வு செய்யப்பட்டதாக இன்டர்போல் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கிம் ஜாங்-யாங்குக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல்துறை அமைப்பு 1923 ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் உலகில் உள்ள 184 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. 

இன்டர்போல் அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளின் காவல்துறைகளுக்கிடையிலான ஒத்துழைப்பு, பிறநாடுகளில் பதுங்கி அல்லது தங்கியிருக்கும் தேடப்படும் நபர்களை கைது செய்து ஒப்படைப்பது, சர்வதேச அளவில் குற்றம்புரிந்து வேறு நாடுகளில் பதுங்கிபவர்கள் குறித்து புலன் விசாரணை மேற்கொள்வது ஆகியவை இந்த அமைப்பின் பணிகளாகும். 

பிரான்சில் உள்ள லியான்ஸ் நகரில் இன்டர்போலின் தலைமையகம் உள்ளது. 

லஞ்ச புகாரில் சிக்கிய முன்னாள் இன்டர்போல் தலைவர்

இன்டர்போல் காவல்துறை தலைவரான மேங் ஹோங்வேய் என்பவர் கடந்த செப்டம்பர் மாதம் தனது தாய்நாடான சீனாவுக்கு சென்றபோது திடீரென்று காணாமல் போனார். இரண்டு மாதங்களாகியும் அவர் என்ன ஆனார்? என்பது தொடர்பான தகவல் ஏதும் கிடைக்காததால், அவருக்கு பதிலாக புதிய தலைவரை தேர்வு செய்ய இன்டர்போல் தலைமையகம் தீர்மானித்தது.

இதற்கிடையில், லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு எதிரொலியாக மேங் ஹோங்வேய் ராஜினாமா செய்ததாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close