கடற்படை கப்பல் பறிமுதல்: ரஷ்யா - உக்ரைன் இடையே பதற்றம் 

  Newstm Desk   | Last Modified : 26 Nov, 2018 05:52 pm
russia-ukraine-tensions-rise-after-kerch-strait-ship-capture

உக்ரைன் நாட்டு கடற்படை கப்பல்களை ரஷ்யா பறிமுதல் செய்ததை அடுத்து, இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது. ரஷ்ய தூதரகம் அருகே இதனை முன்னிட்ட நடந்த போராட்டம் கலவரமானது. 

உக்ரைனின் கிரீமியா பகுதியை சொந்தம் கொண்டாடிய ரஷ்யா, அதனை பின் தனது நாட்டுடன் இணைத்துக் கொண்டது. இதனால் உக்ரைன் - ரஷ்யா இடையே பனிப்போர் பனிப்போர் நடந்து வருகிறது. இந்த நிலையில் அசோவ் கடற்பகுதியில் நின்றுகொண்டிருந்த 3 உக்ரைன் கடற்படை கப்பல்களை ரஷ்யா பறிமுதல் செய்தது. அப்போது நடத்திய தாக்குதலில் உக்ரைன் நாட்டு கடற்படை வீரர்கள் காயமடைந்ததாக தெரிகிறது. 

தங்கள் நாட்டு கடல் பகுதிக்குள் உக்ரைன் கப்பல்கள் அத்துமீறி நுழைந்ததாக ரஷ்யா புகார் தெரிவித்துள்ளது. ஆனால், இருநாடுகளும் பொதுவாக பயன்படுத்தி வரும் அசோவ் கடல் பகுதியில் சென்ற தங்களது கடற்படைக் கப்பல்கள் மீது ரஷ்யா அத்துமீறித் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது. 

இதனிடையே யுக்ரேன் தலைநகர் கீவ்-ல் உள்ள ரஷ்ய தூதரகத்துக்கு வெளியே ஏறக்குறைய 150 பேர் திரண்டு இருந்தனர். அவர்கள் தீ பந்தங்களை தூக்கி எறிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ரஷ்ய தூதரக வாகனம் தீயிட்டு கொளுத்தப்பட்டது. இதனால் இரு நாடுகளின் மத்தியிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது. 

மேலும், வரும் திங்களன்று தங்கள் நாட்டுக்கு எனபிரத்யேக ராணுவ சட்டத்தை இயற்றுவது குறித்த முக்கிய முடிவை அந்நாட்டு எம்பிக்கள் வாக்களிப்பு மூலம் எடுக்க உள்ளனர்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close