உக்ரைனில் படைக்குவிப்பு: போருக்கும் தயார் நிலையில் ரஷ்யா? 

  Newstm Desk   | Last Modified : 28 Nov, 2018 07:05 pm
ukraine-russia-sea-clash-staged-says-putin

உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைபலத்தை அதிகரித்துள்ளது போர் மூளும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக உக்ரைன் அதிபர் பெட்ரோ போரோசெங்கோ குற்றச்சாட்டுக் கூறியுள்ளார்.

உக்ரைன் எல்லையில் ரஷ்யா வழக்கமாக நிறுத்தும் அதி நவீன பீரங்கிகளைவிட மும்மடங்கு அதிகமாக இப்போது நிறுத்தியுள்ளதாக உக்ரைன் அதிபர் பெட்ரோ போரோசெங்கோ தெரிவித்துள்ளார். ஏற்கெனவே கிரிமிய கடற்கரைக்கு வந்த உக்ரைனின் 3 போர்க்கப்பல்களை 24 கடற்படை வீரர்களுடன் ரஷ்யப் படை சிறைபிடித்துள்ளது.

இந்த கடற்படை வீரர்களை விடுவிக்க வேண்டும் என்றும் உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார். இதனிடையே உக்ரைன் ரஷ்யாவுடனான எல்லைப் பகுதியில் 30 நாட்களுக்கு ராணுவச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. 

இந்த ராணுவச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியது பொறுப்பற்ற செயல் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close