பனாமா பேப்பர்ஸ்: பிரபல ஜெர்மன் வங்கியில் அதிரடி ரெய்டு!

  Newstm Desk   | Last Modified : 30 Nov, 2018 05:39 am
germany-raid-in-deutsche-bank-premises

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இயங்கி வரும் ஜெர்மன் நாட்டை சேர்ந்த பிரபல டாய்ட்ச் வங்கியின் அலுவலகத்தில், வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகளுக்காக போலீசார், வரித்துறை அதிகாரிகள் என பலர் அதிரடி ரெய்டு நடத்தினர். 

சர்வதேச அளவில் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான டாய்ட்ச் வங்கியின் மீது நிதி மோசடி குற்றச்சாட்டுகள் எழுந்தன. கடந்த 2016ம் ஆண்டு, பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில், உலகம் முழுவதும் வரி ஏய்ப்பு செய்துவந்த அரசியல்வாதிகள் தொழிலதிபர்கள் என ஆயிரக்கணக்கானோர் குறித்த தகவல்கள் வெளியாகின. லீக்கான ஆவணங்களில், பனாமாவை மையமாகக் கொண்ட ஒரு தனியார் சட்ட நிறுவனம், வெளிநாடுகளில் உள்ளவர்கள் நிதி மோசடி செய்ய, லெட்டர்பேடு நிறுவனங்களை அமைத்து கொடுத்து உதவியது தெரியவந்தது.

முக்கியமாக டாய்ட்ச் வங்கியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் நிதி மோசடி மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் வரி ஏய்ப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக, ஜெர்மன் வரித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் , பிராங்பர்ட் நகரில் உள்ள டாய்ட்ச் வங்கி அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர்.

டாய்ட்ச் வங்கி, தனது கிளை நிறுவனம் ஒன்றின் மூலம் சுமார் 900 வாடிக்கையாளர்கள் வரி ஏய்ப்பு செய்ய உதவியதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 2016ம் ஆண்டில் மட்டும் சுமார் 2,500 கோடி ரூபாய் அளவில் நிதி மோசடி நடந்துள்ளதாக தெரிகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close