ரஷ்ய ஆண்கள் மீது தடை விதித்தது உக்ரைன்!

  Newstm Desk   | Last Modified : 30 Nov, 2018 06:59 pm

ukraine-bans-russians-aged-16-to-60

ரஷ்யாவில் இருந்து வரும் 16 முதல் 60 வயதுக்கு உள்ள ஆண்கள் மீது தடைவிதித்து உக்ரைன் நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே ரஷ்யா நடத்திய திடீர் தாக்குதலை தொடர்ந்து உக்ரைனில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

சில தினங்களுக்கு முன், உக்ரைன் நாட்டிற்கு சொந்தமான 3 கப்பல்கள் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தின. அந்த கப்பல் தங்களது எல்லைக்கு வந்ததாக கூறி, அவற்றை கைப்பற்றி, அதிலிருந்த 24 மாலுமிகளைகைது செய்தது ரஷ்யா. இந்த சம்பவத்திற்கு அமெரிக்க உட்பட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. ஏற்கனவே, உக்ரைன் நாட்டின் க்ரைமியா பகுதியை ரஷ்யா ஆக்கிரமிப்பு செய்திருந்த நிலையில், இந்த புதிய நடவடிக்கையால் உக்ரைனில் பரபரப்பு ஏற்பட்டது.

ரஷ்ய எல்லையில் உள்ள உக்ரைன் பிராந்தியங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் பொருட்டு, ரஷ்யாவை சேர்ந்த ஆண்கள், உக்ரைனுக்குள் வர புதிய தடை  விதித்து அந்நாடு அதிபர் உத்தரவிட்டுள்ளார். 16 வயது முதல் 60 வயதிலான ரஷ்ய ஆண்கள், உக்ரைனுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிய தனியார் ராணுவத்தை உக்ரைனில் ரஷ்யா உருவாக்குவதை தடுக்கவே இந்த முடிவை எடுத்துள்ளதாக உக்ரைன் அதிபர் பெட்ரோ போரோஷென்கோ தெரிவித்துள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close