நியூசிலாந்து கடற்பகுதியில் கரை ஒதுங்கிய திமிங்கிலங்கள்

  டேவிட்   | Last Modified : 01 Dec, 2018 07:56 am

51-pilot-whales-die-in-new-mass-stranding-in-new-zealand

நியூசிலாந்தின் ஹன்சன் வளைகுடாப் பகுதியில் உள்ள சத்தாம் தீவில் 51 பைலட் வகை திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. 

நியூசிலாந்தின் ஹன்சன் வளைகுடாப் பகுதியில் உள்ள சத்தாம் தீவில், 80 முதல் 90 வரையிலான பைலட் வகை திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியது. அதில், சுமார் 40 திமிங்கிலங்கள் தாமாகவே மீண்டும் மிதந்து கடலுக்குள் திரும்பிச் சென்றன. ஆனால் மீதமுள்ள 51 திமிங்கிலங்கள் இறந்தநிலையில் கரை ஒதுங்கின. 

திமிங்கிலங்களின் இறப்புக்கு சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. நோய், பாதை குழப்பம், நிலவியல் சார்ந்த காரணங்கள், மோசமான வானிலை ஆகியவை காரணமாக இருக்கலாம் என நியூசிலாந்து இயற்கை வள பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இதேபோல், நியூசிலாந்தின் ஸ்டீவர்ட் தீவில் சுமார் 145 பைலட் வகை திமிங்கிலங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close