பிரான்சில் அதிரும் போராட்டம்: அவசரநிலை அறிவிக்க முடிவு 

  Newstm Desk   | Last Modified : 02 Dec, 2018 06:32 pm
france-may-impose-emergency-to-contain-worst-civil-unrest-in-a-decade

பிரான்சில் பெட்ரோல், டீசல் மீது வரிவிதிக்கு எதிரான அந்நாட்டு மக்களின் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளதால் அவசர நிலை பிரகடனம் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பிரான்சில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான அதிகப்படியான வரி விதிப்பை இயற்றப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும் மக்களிடையே கோபத்தை தூண்டும் வகையில் மின்கட்டணமும் உயர்த்தப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது 

இதனால் மக்கள் அரசு மீது அதிருப்தியில் உள்ளனர். மேலும், அங்கு அதிபர் இமானுவேல் மேக்ரோனுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்துள்ளது. போராட்டந்த்தின்போது சில பகுதிகளில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறியது. போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலர் தலைநகர் பாரீஸில் வாகனங்களையும் சேதப்படுத்தினர். பல வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

இதனால் அங்கு அசாதாரனமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதை கருத்தில்கொண்டு அவசரநிலையை பிரகடனம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அதிபர் இமானுவேல் மேக்ரோன் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருடன் ஆலோசனையை மேற்கொள்ள உள்ளார். இதற்கிடையே போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டக்குழுவுடன் அமைதியான பேச்சுவார்த்தையை நடத்த தூதும் அனுப்பியுள்ளது. வன்முறை சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close