இது அருங்காட்சியகம் அல்ல.... பெல்ஜியம் சாக்லெட்!

  Padmapriya   | Last Modified : 01 Apr, 2018 07:43 pm

பெல்ஜியத்தில் பிரபலமான சாக்லெட் திருவிழா ஆரம்பமாகியுள்ளது. சாக்லெட் என்றாலே தனி விருப்பம், அதிலும் சாக்லெட்டினால் ஆன விலங்குகள் என்றால் கேட்கவா வேண்டும். ஐரோப்பாவின் பெல்ஜியத்தில் உள்ள டர்பை நகரில் நடக்கும் சாக்லேட் திருவிழாவுக்கு மக்கள் படையாக வருகின்றனர். இந்த விழாவில் 50க்கும் மேற்பட்ட சாக்லேட்டால் செய்யப்பட்ட யானை, குரங்கு, முதலை, பறவைகள் மற்றும் முயல் போன்ற விலங்குகளின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனை பல நாடுகளிலிருந்து வந்திருந்த கை தேர்ந்த 40க்கும் மேற்பட்ட சிற்ப கலைஞர்கள் வடிவமைத்துள்ளனர்.

உலகின் மிகச் சிறிய நகர் தான் டர்பை. ஆனால் இங்கு தான் இந்த உலகின் மிகப்பெரிய சாக்லேட் திருவிழா நடக்கிறது.

விலங்குகளின் சாக்லேட் உருவங்கள் சத்ரூபமாக வடிக்கப்பட்டிருப்பது பார்வையாளர்களை ஆச்சரியமடைய செய்துள்ளது.

இதனால் பல நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா ஆர்வலர்களும் சாக்லெட் பிரியர்களும் இங்கு படையெடுக்கின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close