போராட்டத்தில் இணைந்த மருத்துவ குழுவினர் - தீவிரமாகிறது பிரான்ஸ் நெருக்கடி

  Newstm Desk   | Last Modified : 04 Dec, 2018 03:22 pm

french-ambulance-workers-join-protests-as-crisis-talks-held

பிரான்சில் எரிபொருள் மீதான வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து எழுந்த மக்கள் போராட்டம் தீவிரமான நிலையில் கூடுதலாக ஆம்புலான்ஸ் மற்றும் மருத்துவ குழுக்களும் போராட்டத்தில் இணைந்துள்ளனர். 

பிரான்சில் இன்றும் பல இடங்களில் கலவரம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து அரசு தரப்பு, கலவர சம்பவங்களில் ஈடுபட்டவர்களை அமைதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்தது. ஆனால் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. 

பல இடங்களில் முகமூடி அணிந்த சிலர், பல இடங்களில் கலவரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பல பேருந்துகள், கட்டடங்களுக்கு கலவரத்தின் போது தீ வைக்கப்பட்டது. இதனால், அந்நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக பிரான்ஸ் அரசு தரப்பின் செய்தித் தொடர்பாளர், பெஞ்சமின் கிரீவெக்ஸ் கூறுகையில், ''அமைதியான முறையில் நாம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதைப் போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று வலியுறுத்தியுள்ளார். 

சமீபத்தில் பிரான்ஸில் எரிபொருளுக்கான வரி மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டது. அங்கு லிட்டர் டீசல் ரூ.120 ஆக விற்கப்படுகிறது. பிரான்சில் டீசல் கார்கள் அதிகம் என்பதால் மக்கள் மத்தியில் இதற்கு எதிர்ப்பு இருந்த நிலையில், அது கலரவமாக வெடித்துள்ளது எனப்படுகிறது. இது அரசு தரப்பை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

நாட்டில் திடீரென்று வெடித்துள்ள இந்த கலவர சம்பவங்கள் குறித்து அதிபர் இமானுவேல் மேக்ரன், பிரதமர் மற்றும் அமைச்சர்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களிடம் எப்படி பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பது என்பது குறித்து இந்த சந்திப்பில் முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது. 

போராட்டத்தை ஒருங்கிணைப்பது யார்? 

ஆனால் போராட்டத்துக்கு யார் தலைமை வகிப்பது, எந்த குழு ஒருங்கிணைக்கிறது என்பது தெரியவில்லை என்பதால், பேச்சுவார்த்தை நடத்துவது மேலும் கடினமாகியுள்ளதாக கூறப்படுகிறது. அரசுக்கு எதிரான போராட்டம் நவம்பர் 17 ஆம் தேதி ஆரம்பமானது. அதிலிருந்து சமூக வலைதளங்களில் போராட்டம் குறித்து அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. முகமூடி அணிந்த சில நபர்கள் திடீரென ஒன்று கூடி போராடுகின்றனர். அவர்களுக்கு பொதுமக்களும் ஆதரவு அளிக்கின்றனர். 

புதிதாக போராட்டத்தில் பெராமெடிக்கல் துறையினரும் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆம்புலன்ஸ் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. உதவி மருத்துவ குழுவினரும் போராட்டத்தில் ஈடுபடுவதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தற்போது நடக்கும் மக்கள் போராட்டத்துக்கு, 'யெல்லோ வெஸ்ட்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அந்தப் போராட்டித்தில் பங்கு பெற்றுள்ள பிரான்ஸ் நாட்டு சமூக செயற்பாட்டாளர் மார்செல்லி, ''இன்று பல்வேறு இடங்களில் கலவரம் நடந்ததை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஆனால் இது எல்லாவற்றுக்கும் காரணம் அரசுதான். செயல்படாமல் இருந்த அரசு தான் இந்த அனைத்துப் பிரச்னைக்கும் காரணம்'' என்று குற்றம்சாட்டியுள்ளார். இது போல போராட்டக்காரர்களுக்கு பலவாறான இயக்கங்கள் ஆதரவு அளிக்கின்றன. 

Newstm.in 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.