இலவச போக்குவரத்து சேவை வழங்கும் முதல் நாடு !

  Newstm Desk   | Last Modified : 06 Dec, 2018 03:46 pm
luxembourg-set-to-make-all-public-transport-free

லக்செம்போர்க் நாட்டில் அடுத்த கோடைக்காலத்தில் இருந்து பொது போக்குவரத்து சேவையை இலவசமாக வழங்க அந்த நாட்டு அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்று லக்செம்போர்க் . பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் ஜெர்மனி நாடுகளால் சூழப்பட்ட குட்டி நாடு இது. இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகை 590,321. 

இந்த நாட்டின் பிரதமராக சேவியர் பெட்டெல் 2வது முறையாக கடந்த புதன் அன்று பதவி ஏற்றார். அவர் தனது தேர்தல் பிரச்சாரத்தில் தான் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கவனம் செலுத்த இருப்பதாக தெரிவித்தார். 

தற்போது அதனை நிறைவேற்றும் வகையில் புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளார். அதன் படி அடுத்த கோடை காலத்தில் இருந்து அந்த நாட்டில் பொது போக்குவரத்து சேவையை கட்டணம் இல்லாமல் வழங்க அவர் முடிவு செய்துள்ளார். இதன் மூலம் இலவச போக்குவரத்து சேவை வழங்கும் முதல் நாடு என்ற பெருமையை லக்செம்போர்க் பெற இருக்கிறது. எனினும் முதல் மற்றும் இரண்டாவது கிளாஸ் கம்பார்ட்பண்ட்களுக்கு மட்டும் டிக்கெட்டை விற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close