ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு ரூ.81 கோடி அபராதம்!

  Newstm Desk   | Last Modified : 08 Dec, 2018 03:05 pm

italy-impose-10-million-euros-fine-to-facebook

பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்களை அவர்களது அனுமதியின்றி திருடி, அவற்றை பல்வேறு வர்த்தக நோக்கங்களுக்கு பயன்படுத்தியதற்காக, ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு இத்தாலி அரசு ரூ.81 கோடி அபராதம் விதித்துள்ளது.

ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு, அவை பல்வேறு வர்த்தக நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு உலகம் முழுவதும் பரவலாக இருந்து வருகிறது.

இத்தாலியிலும் இந்த குற்றச்சாட்டு எழவே, அதுகுறித்து அந்நாட்டின் நுகர்வோர் கண்காணிப்பு அமைப்பான ஏஜிசிஎம் தீவிர விசாரணை மேற்கொண்டது. அதில், தங்களது பயன்பாட்டாளர்களின் அனுமதி இல்லாமலேயே அவர்களின் தனிப்பட்ட தகவல்களை ஃபேஸ்புக் நிறுவனம் திருடியுள்ளதும், அத்தகவல்களை பல்வேறு வர்த்தக நோக்கங்களுக்காக பயன்படுத்தியுள்ளதும் தெரிய வந்தது.

இதையடுத்து ஏஜிசிஎம், ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு 10 மில்லியன் யூரோக்கள் (ரூ81 கோடி) அபராதம் விதித்துள்ளது.

இத்தாலி, அயர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 5 கோடி பயன்பாட்டாளர்களின் தகவல்களை ஃபேஸ்புக் நிறுவனம் திருடியுள்ளதாக, அண்மையில் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close