ஆப்பிள், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது புதிய வரி - பிரான்ஸ் அதிரடி!

  Newstm Desk   | Last Modified : 19 Dec, 2018 05:34 am
france-to-impose-digital-tax-on-companies-like-apple-google-etc

ஐரோப்பிய யூனியனின் வரி சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், ஆப்பிள், கூகுள், அமேசான் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது 'டிஜிட்டல் டாக்ஸ்' என்ற புதிய வரியை விதிக்க பிரான்ஸ் அரசு முடிவெடுத்துள்ளது.

ஐரோப்பிய யூனியன் சட்டதிட்டத்தின்படி பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள், சட்டபூர்வமாகவே வரி ஏய்ப்பு செய்து வருகின்றன. இதை தடுக்க ஐரோப்பிய யூனியன் எடுக்கும் முயற்சிகளை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், தற்போது அதை ஈடுகட்ட 'டிஜிட்டல் டாக்ஸ்' என்ற புதிய வரியை இந்த நிறுவனங்கள் மீது விதிக்க பிரான்ஸ் அரசு முடிவு எடுத்துள்ளது

இந்த புதிய வரியின் மூலம் 500 மில்லியன் யூரோ அதாவது சுமார் 4000 கோடி வரை 2019ம் ஆண்டு மட்டும் கூடுதல் வரி வசூல் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளில் கிடைக்கும் லாபங்களை, குறைந்த வரி உள்ள சிறிய ஐரோப்பிய நாடுகள் மூலமாக மாற்று வழியில் பெற்று வரியில் இருந்து தப்பி வருகின்றன. இதை தடுத்து, பெரிய நிறுவனங்களிடம் இருந்து உரிய வரியை வசூலிக்க, குறிப்பிட்ட நாடுகள் பல்வேறு நடவடிகைய்கள் நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

முன்னதாக, மிகப் பெரிய நிறுவனங்கள் மீது 3% கூடுதல் வரி விதிக்க ஐரோப்பிய யூனியன் பரிந்துரை செய்தது. ஆனால் இதற்கு அனைத்து ஐரோப்பிய யூனியன் உறுப்பினர் நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும் என்பதால், இது குறித்து ஆலோசனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close