பாரிஸில் எரிவாயு கசிந்து பெரும் வெடிவிபத்து; 4 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 12 Jan, 2019 07:44 pm
paris-gas-leak-blast-leads-to-4-dead

பாரிஸ் நகரில் உள்ள ஒரு அடுமனையில் எரிவாயு கசிந்ததை தொடர்ந்து ஏற்பட்ட வெடிவிபத்தில், தீயணைப்பு படை வீரர்கள் உள்பட 4 பேர் இறந்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.

பாரிஸ் நகரில் உள்ள ரு டே ட்ரெவிஸ் என்ற பகுதியில் உள்ள ஒரு அடுமனையில் இன்று காலை திடீரென எரிவாயு கசிவு ஏற்பட்டதும் இதைத் தொடர்ந்து தீயணைப்புப்படை வீரர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். எரிவாயு கசிவை கண்டுபிடிக்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டிருந்த போது, திடீரென பயங்கர சத்தத்துடன் அடுமனை வெடித்தது. இதில் 12 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் 3 பேர் தீயணைப்பு படை வீரர்கள் என கூறப்பட்டது.

இந்த நிலையில் 2 தீயணைப்பு படை வீரர்கள் உட்பட 4 பேர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close