மெக்சிகோ எண்ணெய் குழாய் வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 66ஆக உயர்வு!

  Newstm Desk   | Last Modified : 19 Jan, 2019 10:09 pm
mexico-pipeline-blast-death-toll-rises-to-66

மெக்சிகோ நாட்டின் ஹிடல்கோ பகுதியில், எண்ணெய் குழாயில் கசிவு ஏற்படடதை தொடர்ந்து, எண்ணெய்யை எடுத்துச் செல்ல பொதுமக்கள் கூடியிருந்த நேரத்தில், குழாய் வெடித்ததால் பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. 

மத்திய மெக்சிகோவில் உள்ள ஹிடல்கோ பகுதியில் அமைக்கபட்டுட்டள்ள எண்ணெய் குழாயில் பயங்கர வெடிவிபத்து இன்று ஏற்பட்டது. எண்ணெய் திருடும் சில, குழாயை நேற்று இரவு சேதப்படுத்தியதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து, குழாயின் ஒரு பகுதியில் கசிந்து வந்த எண்ணெய்யை எடுத்துச் செல்ல, பொதுமக்கள் அந்த இடத்தில கூடியிருந்தனர். அப்போது திடீரென, தீ பற்றி எண்ணெய் குழாய் வெடித்தது. இதில், 20 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது. 

மேலும் பலர் காயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், பலி எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், 76 பேர் காயமடைந்துளளனர். அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன் ஏன் அதிகாரிகள் அங்கு வரவில்லை என அம்மாநில அரசுக்கு எதிராக கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. சரியான நேரத்தில் அந்த இடத்திற்கு ராணுவம் விரைந்தாலும், மக்கள் அதிக அளவில் இருந்ததால்,அந்த இடத்தை சுற்றி பாதுகாப்பு வலயத்தை போட முடியவில்லை என்று கூறப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close