இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு நேபாலில் தடை!

  Newstm Desk   | Last Modified : 21 Jan, 2019 07:34 pm
nepal-central-bank-bans-indian-currencies

இந்திய ரூபாய் நோட்டுக்கள் அதிகம் பயன்படுத்தப்படும் நேபால் நாட்டில், இனி 200, 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த தடை விதித்து அந்நாட்டின் மத்திய வங்கி உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடான நேபாலில், இந்திய ரூபாய் நோட்டுகள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 2016ம் ஆண்டு, இந்திய அரசு, 500, 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்து, பின்னர் புதிய 2000, 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், நேபால் நாட்டின் பொருளாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் இந்த நடவடிக்கையால் நேபால் நாட்டின் பொருளாதாரம் பாதிப்படைந்ததாக அந்நாட்டு அரசு குற்றம் சாட்டியது. இதை தொடர்ந்து புதிய இந்திய ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும், என அந்நாட்டு அரசின் சார்பில் பரிந்துரை செய்யப்பட்டது. அதை ஏற்று, நேபால் மத்திய வங்கி, 200, 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்த தடை விதித்துள்ளது. நேபால் நாட்டவர்கள் வெளிநாட்டுக்கு சென்று திரும்பும்போதும், இந்திய ரூபாய் நோட்டுக்களை கொண்டு வரக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சுமார் 13.5 லட்சம் இந்திய சுற்றுலா பயணிகள் ஒவ்வொரு ஆண்டும் நேபாளத்திற்கு சென்று வரும் நிலையில், இந்த நடவடிக்கையால் பலர் அதிருப்தி அடைந்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close