பிரெக்சிட் ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் கிடையாது: மேக்ரான் திட்டவட்டம்

  Newstm Desk   | Last Modified : 30 Jan, 2019 06:29 am
brexit-deal-is-not-negotiable-macron

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகும் பிரெக்சிட் ஒப்பந்தத்தில், சுமுகமான தீர்வு ஏற்படாவிட்டால், பிரிட்டனுடனான உறவு முழுவதும் துண்டிக்கப்பட அனைவரும் தயாராக வேண்டுமென பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகும் பிரெக்சிட் வரைவு ஒப்பந்தத்தில், பிரிட்டனுக்கு கடும் இழப்பு ஏற்படும். என அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். புதிய ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் தெரசா மே-வுக்கு நெருக்கடி எழுந்துள்ளது.

இந்நிலையில், பிரெக்சிட் ஒப்பந்தத்தில், எந்த மாற்றமும் செய்ய முடியாது, என பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தெரிவித்துள்ளார். சைப்ரஸ் நாட்டில் நடைபெற்ற சர்வதேச உச்சிமாநாட்டிற்குப் பிறகு பேசிய அவர் "பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுவரும் வாக்கெடுப்பிற்கு பிறகு, ஐரோப்பிய யூனியன் தரப்பில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கிறோம். எந்த ஒப்பந்தமும் இல்லாமல், பிரிட்டன் யூனியனில் இருந்து பிரிவது யாருக்குமே நல்லதல்ல. ஆனால் அதற்காக அனைவரும் தயாராக வேண்டும்" என்று கூறினார்.

ஏற்கனவே ஐரோப்பிய யூனியனுடன் பிரிட்டன் கொண்டு வந்துள்ள வரைவு ஒப்பந்தத்தில், வேறு எந்த மாற்றமும் செய்ய முடியாது, என்றும் மேக்ரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close