மாயமான கால்பந்து வீரரின் விமான பாகங்கள் கண்டுபிடிப்பு!

  Newstm Desk   | Last Modified : 04 Feb, 2019 06:46 am
emiliano-sala-s-flight-wreckage-found

அர்ஜென்டினா கால்பந்து வீரர் எமிலியானோ சாலா, பிரான்சில் இருந்து வேல்ஸ் நாட்டிற்கு வந்த விமானம், கடந்த 2 வாரங்களுக்கு முன் மாயமான நிலையில், விமான பாகங்களை தனியார் மீட்புப் படையினர் கண்டுபிடித்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

பிரான்சின் நான்டஸ் அணிக்காக விளையாடி வந்த அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த எமிலியானோ சாலா, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் பிரான்ஸில் இருந்து வேல்ஸ் நாட்டுக்கு சிறிய ரக தனி விமானம் மூலம் சென்று கொண்டிருந்தார். அப்போது இங்கிலீஷ் கால்வாய் அருகே, அவரது விமானம் மாயமானது. அவரும் பைலட்டும் மட்டுமே பயணம் செய்த அந்த விமானத்தில், ஏற்கனவே கோளாறுகள் இருந்ததாக கூறப்பட்டது.

இருவரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்புகள் மிக கம்மி என்பதால் விமானத்தை கண்டு பிடிப்பதற்கான அரசின் மீட்புப்பணிகள், கடந்த மாதம் 24ம் தேதியோடு நிறுத்தப்பட்டன. சாலாவின் பெற்றோரின் கோரிக்கையை தொடர்ந்து, தனியார் நிறுவனம் மூலம் விமானத்தை கண்டுபிடிக்க தேடுதல் பணிகளை நடத்த பொதுமக்கள் நன்கொடை வழங்க ஏற்பாடுசெய்யப்பட்டது. உலகக் கோப்பை வெற்றியாளரான பிரான்ஸ் நாட்டின் கால்பந்து வீரர் ம்பாப்பே உட்பட பலர் இதில் நிதியுதவி செய்தனர்.

பின் ஒரு தனியார் நிறுவனம் மீட்புப் பணிகளுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்நிலையில், மாயமான விமானத்தின் பாகங்களை கண்டுபிடித்து விட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை, பிரிட்டனின் விமான விபத்து விசாரணை அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close