பாரீஸ்: தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 05 Feb, 2019 03:39 pm
7-dead-28-injured-in-paris-building-blaze

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்தனர். 

மத்திய பாரீஸ் நகரில், சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்துள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். தீக்காயமடைந்த 28 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மொத்தம் 200 தீயணைப்புப் படை வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

கட்டடத்தின் 7 மற்றும் 8 -ஆவது தளத்திலிருந்து குடியிருப்புவாசிகள் இன்னமும் முழுமையாக வெளியேற்றப்படாததால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என தீயணைப்புப் படை வீரர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close