அமெரிக்காவுக்கு பதிலடி: புதிய நவீன ஏவுகணைகளை உருவாக்க ரஷ்யா திட்டம்!

  Newstm Desk   | Last Modified : 05 Feb, 2019 10:11 pm
russia-to-make-2-new-missiles

அமெரிக்கா - ரஷ்யா இடையிலான அணுஆயுத ஏவுகணை தடை ஒப்பந்தத்தில் இருந்து இருநாடுகளும் பின்வாங்கியதை தொடர்ந்து, புதிதாக இரண்டு நவீன ஏவுகணைகளை உருவாக்க திட்டமிட்டு வருவதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே இருந்த பனிப்போர் முடிவில், 1987ம் ஆண்டு, இரு நாடுகளும் அணு ஆயுத தடை ஒப்பந்தத்திற்கு வந்தன. இதைத் தொடர்ந்து, இரு நாடுகளும் இடைப்பட்ட தூரம் மற்றும் குறுகிய தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை தயாரிக்க கடை இருந்தது.

ரஷ்யா இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து மீறி வருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டி வந்தார். அதனால் அந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக முதலில் அவர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, ரஷ்யாவும் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்தது. கலிபிர் க்ரூஸ் மற்றும் ஹைப்பர்சானிக் என்ற இரண்டு வகை ஏவுகணைகளை மையமாக கொண்டு, தரையில் இருந்து ஏவப்படும் இரண்டு புதிய ஏவுகணை திட்டங்களை உருவாக்க உள்ளதாக, ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்கெய் ஷோய்கு தற்போது உறுதி செய்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close