முன்கூட்டியே தேர்தல் அறிவித்த ஸ்பெயின் பிரதமர்

  Newstm Desk   | Last Modified : 15 Feb, 2019 06:42 pm
spain-prime-minister-calls-for-early-elections

ஸ்பெயின் நாட்டின் அதிபர்  பெட்ரோ சான்சஸ், ஆட்சியை கலைத்து, தேர்தலை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டுள்ளா.ர் வரும் ஏப்ரல் 28ம் தேதி நாடாளுமன்ற தேர்தலை நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்பெயின் நாட்டில், சோசியலிச கட்சியின் சார்பாக, பெட்ரோ சான்சஸ் பிரதமர் பதவி வகித்து வருகிறார். அவரது ஆட்சிக் காலம் முடிவடையும் முன்னதாகவே, நாடாளுமன்ற தேர்தலை நடத்த அவர் முடிவு செய்துள்ளார். இதற்காக நாடாளுமன்றத்தை கலைத்து, வரும் ஏப்ரல் மாத இறுதியில் தேர்தலை நடத்த அவர் திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் "நாடாளுமன்றத்தை கலைத்து, ஏப்ரல் 28ம் தேதி தேர்தலை நடத்த நான் பரிந்துரை செய்கிறேன்" என்று அறிக்கை வெளியிட்டார்.

முன்னதாக கடந்த ஜூன் மாதம்,  நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து, எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சியை கவிழ்த்து, பெட்ரோ சான்சஸ் ஆட்சிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close