புல்வாமா தாக்குதலுக்கு வங்கதேச பிரதமர் கடும் கண்டனம்; தீவிரவாதத்தை அழிக்க துணை நிற்போம் எனவும் உறுதி!

  Newstm Desk   | Last Modified : 17 Feb, 2019 04:17 pm
bangladesh-condemned-pulwama-attack

காஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கு வங்கதேச நாடு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, தீவிரவாதத்தை அடியோடு வேரறுக்க இந்தியாவுக்கு துணையாக வங்கதேசம் இருக்கும் என்றும் உறுதியளித்துள்ளது. 

காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பினர் நடத்திய தீவிரவாத தாக்குதலில் நமது இந்திய பாதுகாப்புப்படை வீரர்கள் 38 பேர் வீர மரணம் அடைந்தனர். பாகிஸ்தானை மையமாக கொண்ட ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்கத்தைச் சேர்ந்த ஆதில் அஹமது என்பவன் திட்டமிட்டு இந்த தாக்குதலை நடத்தியுள்ளான்.

இந்த கொடூர தீவிரவாத தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவத்துள்ள நிலையில், வங்கதேச நாடும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக, வங்கதேச பிரதமர் தரப்பில் அந்நாட்டு தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஹசான் மஹ்முத், பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள செய்தியில், "காஷ்மீர் புல்வாமாவில் பயங்கரவாத தாக்குதலுக்கு உயிரிழந்த வீரர்களுக்கு வங்கதேச மக்கள் சார்பிலும், என் சார்பிலும், அரசு சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தாக்குதல் கடும் கண்டனத்துக்கு உரியது. உலக அளவில் தீவிரவாதத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தீவிரவாதத்தை அடியோடு வேரறுக்க இந்தியாவுக்கும், மற்ற நாடுகளுக்கும் துணையாக வங்கதேசம் இருக்கும்" என்று குறிப்பிட்டு உள்ளார்.

newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close