கூகுளுக்கு 11,700 கோடி ரூபாய் அபராதம்!

  Newstm Desk   | Last Modified : 20 Mar, 2019 09:57 pm
google-fined-1-4-billion-euros-by-europe

போட்டி நிறுவனங்களின் விளம்பரதாரர்களை தடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட கூகுள் நிறுவனத்தின் மீது, ஐரோப்பிய யூனியனின் ஒழுங்குமுறை ஆணையம் 11,700 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய இணைய நிறுவனமான கூகுள், தனது தளங்களில் போட்டி நிறுவனங்களின் விளம்பரதாரர்களை தடை செய்வதாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு அபராதமாக ஐரோப்பிய யூனியனின் ஒழுங்குமுறை ஆணையம், கூகுள் நிறுவனத்தின் மீது 1.49 பில்லியன் யூரோக்கள், அதாவது ரூ.11,700 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

ஏற்கனவே, கடந்த ஆண்டு தனது ஆண்ட்ராய்டு மொபைல்களில், போட்டி நிறுவனங்களை தடை செய்ததற்காக கூகுள் நிறுவனத்தின் மீது 4.34 பில்லியன் யூரோக்களை ஐரோப்பிய போட்டி ஒழுங்குமுறை ஆணையம் அபராதமாக விதித்தது. அதற்கு முன், 2017ம் ஆண்டு, போட்டி நிறுவனங்களின் விளம்பர இணையதளங்களை தடை செய்ததாக 2.42 பில்லியன் யூரோக்கள் அபராதமும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close