பிரெக்சிட்: பிரிட்டனுக்கு கால அவகாசம் வழங்க ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்!

  Newstm Desk   | Last Modified : 22 Mar, 2019 09:19 pm
brexit-eu-decides-to-grant-time-for-britain

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறும் பிரெக்சிட் ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் இல்லாத நிலையில், பிரிட்டனுக்கு மேலும் கால அவகாசம் வழங்க ஐரோப்பிய யூனியன் முடிவெடுத்துள்ளது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரெக்சிட் ஒப்பந்தம் கையெழுத்தாவதில் தொடர்ந்து இழுபறி நிலை நீடித்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தெரசா மே தலைமையிலான பிரிட்டன் அரசு, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஆனால், இந்த பேச்சுவார்த்தைகளில் பிரிட்டனுக்கு போதுமான சலுகைகள் வழங்க ஐரோப்பிய தலைமை மறுத்துவிட்டது. முதற்கட்ட ஒப்பந்தத்தை தனது நாடாளுமன்றத்தின் முன் பிரிட்டன் அரசு சமர்ப்பித்த நிலையில், அதை எம்.பி.க்கள் நிராகரித்துவிட்டனர்.

மேலும், இரண்டு முறை அதே ஒப்பந்தத்தில் சிறிய மாற்றங்களை செய்து தெரசா மே சமர்ப்பித்தார். ஆனால் மீண்டும் அவை தோற்றன. வரும் 29 -ஆம் தேதியுடன், பிரிட்டன் ஒப்பந்தமே இல்லாமல் ஐரோப்பிய யூனியனை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டு விடும். இது அந்நாட்டின் பொருளாதாரத்தை வரலாறு காணாத நிலையில் பாதிக்கும் என்பதால், பிரிட்டன் அரசு கால அவகாசத்தை நீட்டிக்க கோரிக்கை வைத்தது. அதை ஏற்று பிரிட்டன் அரசுக்கு ஏப்ரல் 12 -ஆம் தேதி வரை ஐரோப்பிய யூனியன் கால அவகாசம் வழங்கியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close