நாட்டின் தலைநகருக்கு அதிபரின் பெயர்!

  Newstm Desk   | Last Modified : 24 Mar, 2019 07:06 am
kazakhstan-capital-name-changed-after-former-president

கஜகஸ்தான் நாட்டின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கசிம்-ஜோமார்ட் டோகயேவ், புதிய சட்டத்தின் மூலம், சமீபத்தில் பதவி விலகிய அந்நாட்டின் முன்னாள் அதிபர் நுர்சுல்தான் நசர்பயேவின் பெயரை தலைநகர் அஸ்தானாவுக்கு வைக்க உத்தரவிட்டுள்ளார். 

30 ஆண்டுகளாக கஜகஸ்தான் அதிபராக பணியாற்றி வந்த நூர்சுல்தான் நசர்பயேவ், கடந்த புதனன்று, திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் பதவி விலகினாலும், அவருக்கு நெருக்கமான ஒருவர் புதிய அதிபராக பதவியேற்பார் என்று கூறப்பட்ட நிலையில், புதிய அதிபராக கசிம்-ஜோமார்ட் டோகயேவ் பதவியேற்றார்.

இந்நிலையில், அவர் தனது முதல் நடவடிக்கையாக, கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவின் பெயரை நுர்-சுல்தான் என மாற்ற உத்தரவிட்டார். இதற்கான சட்டம் நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த புதிய பெயர் மாற்றம், வரும் திங்கட்கிழமை முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது மக்களில் ஒரு சிலர் இந்த பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பொது வாக்கெடுப்பு நடத்தாமல் தலைநகரின் பெயர் மாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பலர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close