அதிபர் தேர்தலில் முன்னிலை பெற்றுள்ள காமெடியன்!

  Newstm Desk   | Last Modified : 31 Mar, 2019 10:20 pm
ukraine-presidential-elections-sees-comedian-as-frontrunner

உக்ரைன் அதிபர் தேர்தலில், அதிபர் பெட்ரோ போரோஷென்கோ மீண்டும் வெற்றி பெற முயற்சித்து வரும் நிலையில், அவரை விட ஒரு தொலைக்காட்சி காமெடியன் கருத்துக்கணிப்புகளில் முன்னிலை பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் நாட்டின் அதிபர் தேர்தல் வாக்குப்பதி0வு இன்று நடைபெற்று வருகிறது. அதிபர் பெட்ரோ போரோஷெங்கோ மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக நிற்கும் வேட்பாளர்களில், அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி முன்னிலை பெற்றுள்ளது, காமெடியன் வோலோடிமிர் செலென்ஸ்கி. 43 வயதான இவர், உக்ரைன் தொலைக்காட்சி தொடர் ஒன்றில், சாமானியர் ஒருவர் அதிபர் ஆவது போல நடித்து வந்துள்ளார். 

தற்போது அந்த நிகழ்ச்சியின் கதையை நிஜமாக்கும் வகையில், அவர் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வருகிறார். தேர்தலில், அதிபர் பெட்ரோ போரோஷென்கோவை விட அவர் கருத்துக்கணிப்புகளில் முன்னிலை பெற்றுள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இவர்கள் இருவர் தவிர மேலும் பல வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடும் நிலையில், வாக்குப்பதிவில் 50 சதவீதத்துக்கு மேல் யாரும் வெற்றிபெறும் வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. 

50% வாக்குகளை யாரும் பெறாவிட்டால், அதிகபட்ச வாக்குகளை பெற்ற முதல் இரண்டு வேட்பாளர்களுக்கு, ஏப்ரல் 21ம் தேதி மற்றொரு தேர்தல் நடைபெறும். இதில் எவர் அதிக வாக்குகளை பெருகிறாரோ அவர்  அதிபர் பதவியேற்பார். 3.4 உக்ரேனியர்கள் இந்த தேர்தலில் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close