பிரேசில்: மது பாருக்குள் துப்பாக்கி சூடு; 11 பேர் பலி !

  டேவிட்   | Last Modified : 20 May, 2019 10:56 am
brazil-11-people-reportedly-killed-by-group-of-gunmen

பிரேசில் நாட்டில் உள்ள பெலம் நகரில் அடையாளம் தெரியாத நபர்கள் மது பாருக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 11 பேர் பலியாகினர். 

பிரேசில் நாட்டின் பெலம் நகரில் உள்ள ஒரு மது பாரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முகமூடி அணிந்தபடி பைக் மற்றும் கார்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், துப்பாக்கிச் சுடு நடத்தினர்.  சிறிது நேரத்தில் அந்த நபர்கள், அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த தாக்குதலில் 6 பெண்கள் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காயமடைந்த பலரும் சிகிச்சைக்காக மருத்துவமனைியல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  போதைப்பொருள் விற்பனை செய்வதில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close