வெள்ளத்தில் மிதக்கும் வெள்ளை மாளிகை!

  Newstm Desk   | Last Modified : 09 Jul, 2019 12:06 pm
white-house-basement-offices-flooded-after-heavy-rain-in-washington

அமெரிக்கா வாஷிங்டனில் பெய்த தொடர் கனமழையினால் வெள்ளை மாளிகையில் வெள்ள நீர் புகுந்தது. இதையடுத்து நீரை வெளியேற்றும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. நேற்று வாஷிங்டனில் பல மணி நேரங்களாக மழை கொட்டியது. ஒரு மணி நேரத்திலேயே 8.4 செமீ என்ற அளவில் மழை பதிவானது. 

இதையடுத்து சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கட்டிடங்களில் வெள்ள நீர் புகுந்தது. பல்வேறு இடங்களில் சிக்கியவர்களை மீட்கும்பணி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையிலும் வெள்ள நீர் புகுந்தது. வெள்ளை மாளிகை கட்டிடத்தில் தரைத்தளத்தில் நீர் புகுந்தது. இதையடுத்து நீரை வெளியேற்றும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close